சத்யம், ஐநாக்ஸ், PVR, ESCAPE மற்றும் FAME ஆகிய திரையரங்குகள் டிக்கெட் விற்பனை சனிக்கிழமை (அக்டோபர் 22 ) இரவு முதல் துவங்க இருக்கிறார்கள். தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் தனது இணையங்களில் படத்தினை பரபரப்பாக விளம்பரப்படுத்தி வருகிறார். எந்த எந்த ஊர்களில் எந்த எந்த தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது போன்ற முழு தகவல்களையும் வெளியிட்டு வருகிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் சூர்யா கூட்டணிக்கு இருக்கும் ஓப்பனிங் இப்படத்தின் டிக்கெட் விற்பனையின் மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளது.